Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ யானைகளை விரட்டியதில் விபரீதம்: பட்டாசு வெடித்து ஒருவர் காயம்

யானைகளை விரட்டியதில் விபரீதம்: பட்டாசு வெடித்து ஒருவர் காயம்

யானைகளை விரட்டியதில் விபரீதம்: பட்டாசு வெடித்து ஒருவர் காயம்

யானைகளை விரட்டியதில் விபரீதம்: பட்டாசு வெடித்து ஒருவர் காயம்

ADDED : ஜூலை 01, 2025 03:26 AM


Google News
Latest Tamil News
மூணாறு: மூணாறு அருகே சின்னக்கானல் 301 காலனியில் வீட்டின் முன்பு நின்ற காட்டு யானைகளை விரட்ட கையில் வைத்திருந்த பட்டாசு வெடித்து ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.

சின்னக்கானல் 301 காலனியில் மறையூர்குடியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜ் 51, வசித்து வருகிறார்.

அப்பகுதியில் சில நாட்களாக முகாமிட்டுள்ள காட்டு யானை கூட்டம் நேற்று முன்தினம் இரவு ஆரோக்கிய ராஜின் வீட்டின் முன்பு வந்தது. அவற்றை விரட்டுவதற்கு பட்டாசு, மண்ணெண்ணெய் விளக்கு ஆகியவற்றுடன் வெளியில் வந்தார். அப்போது எதிர்பாராத வகையில் பட்டாசு வெடித்து சிதறியது.

அதில் பலத்த காயம் அடைந்த ஆரோக்கியராஜ் பலமாக அலறினார். சப்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் சென்றபோது ஆரோக்கியராஜின் வீட்டின் முன்பு காட்டு யானைகள் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

யானைகளை விரட்டியவர்கள் பலத்த காயம் அடைந்த ஆரோக்கியராஜை மீட்டு அடிமாலி தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கிருந்து மேல்சிகிச்சைக்கு தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கவலை: கடந்த ஒரு மாதமாக பெய்த பலத்த மழையில் ஏலம், காபி உட்பட பணப்பயிர்கள் பெரும் அளவில் சேதமடைந்தன. இதனிடையே அவற்றை காட்டு யானைகளும் சேதப்படுத்துவதால் விவசாயிகளான மலைவாழ் மக்கள், பொதுமக்கள் ஆகியோர் பெரும் கவலை அடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us