/உள்ளூர் செய்திகள்/தேனி/ குழாய் பதிப்பதால் ரோடு சேதம் பராமரிக்கக் கோரி மறியல் குழாய் பதிப்பதால் ரோடு சேதம் பராமரிக்கக் கோரி மறியல்
குழாய் பதிப்பதால் ரோடு சேதம் பராமரிக்கக் கோரி மறியல்
குழாய் பதிப்பதால் ரோடு சேதம் பராமரிக்கக் கோரி மறியல்
குழாய் பதிப்பதால் ரோடு சேதம் பராமரிக்கக் கோரி மறியல்
ADDED : ஜூலை 01, 2025 03:27 AM
உத்தமபாளையம்: உத்தமபாளையம் பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய் பதிக்க தோண்டிய பள்ளங்களை மூட வலியுறுத்தி கடைக்காரர்கள், பொதுமக்கள் நேற்று மாலை ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
ஜல் ஜீவன் திட்ட குழாய் பதிக்க ரத வீதிகளையும், நகரின் முக்கிய தெருக்களை தோண்டி, நடக்க முடியாத அளவிற்கு ரோடு சேதமடைந்துள்ளது. இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெறாமல் குழாய் பதிக்க பள்ளம் தோண்டினர். பின் தோண்டிய பள்ளங்களை மூடவில்லை.
இதனால் வாகனங்கள் போகும் போது, இரண்டு பக்கமும் கடைகள் வைத்திருப்பவர்களால் உட்கார முடியவில்லை. தூசி கடைகளில் படர்கிறது.
ரோட்டை பராமரிக்க பல முறை கூறியும் நடவடிக்கை இல்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த வர்த்தகர்கள், பொதுமக்கள் உத்தமபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே கம்பம் - - தேனி ரோட்டில் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் சமாதானம் செய்தனர். ஆனால் பொதுமக்கள் ஏற்கவில்லை. நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை.