/உள்ளூர் செய்திகள்/தேனி/தேனி தொகுதியை காங்.,கிற்கு ஒதுக்க வர்த்தக காங்கிரஸ் தீர்மானம்தேனி தொகுதியை காங்.,கிற்கு ஒதுக்க வர்த்தக காங்கிரஸ் தீர்மானம்
தேனி தொகுதியை காங்.,கிற்கு ஒதுக்க வர்த்தக காங்கிரஸ் தீர்மானம்
தேனி தொகுதியை காங்.,கிற்கு ஒதுக்க வர்த்தக காங்கிரஸ் தீர்மானம்
தேனி தொகுதியை காங்.,கிற்கு ஒதுக்க வர்த்தக காங்கிரஸ் தீர்மானம்
ADDED : பிப் 11, 2024 01:37 AM
தேனி: தேனி ஸ்ரீராம் நகரில் நடந்த மாவட்ட வர்த்தக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார்.
காங்., வளர்ச்சிக்கும், நிர்வாக வசதிக்காக மாவட்ட காங்கிரஸ் கட்சியை வடக்கு தெரு என இரண்டாக பிரிக்க கோரி மாநில,அகில இந்திய தலைமைக்கு வேண்டுகோள் விடுக்கவும். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தேனி தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்க வலியுறுத்த வேண்டும்.
தேனி லோக்சபா தொகுதியில் வெளியூரில் இருந்து வந்து வாய்ப்பு கேட்பவர்களை தவிர்த்து தொகுதிக்குள் வசிக்கும், தகுதி வாய்ந்த வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வர்த்தக காங்கிரஸ் மாநிலச் செயலாளர்கள் மருதன், சுப்புராமன், ஆரோக்கியராஜ், ஆதித்யா அழகர்ராஜா, முன்னாள் நகர் காங்கிரஸ் தலைவர் சின்ஸ், ஆண்டிபட்டி வட்டார வர்த்தக காங்கிரஸ் தலைவர் மகாராஜன், அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கிங் கமிட்டி மாவட்டத் தலைவர் கணேஷ்மிஸ்ரா, தேனி மாவட்ட ராகுல்காந்தி பேரவை தலைவர் கஜேந்திரன், பொதுச் செயலாளர் அக்கீம் பாட்சா, தேனி நகர வர்த்தக காங்கிரஸ் தலைவர் ராஜன் அமர்சிங், போடி நகரச் செயலாளர் ஹரிகரன், பொருளாளர் ஜெயகணேசன், இணைச் செயலாளர் கலந்து கொண்டனர்.