/உள்ளூர் செய்திகள்/தேனி/ நீலக் குறிஞ்சி பூக்களை தேடி சென்று ரசிக்கும் சுற்றுலா பயணிகள் நீலக் குறிஞ்சி பூக்களை தேடி சென்று ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
நீலக் குறிஞ்சி பூக்களை தேடி சென்று ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
நீலக் குறிஞ்சி பூக்களை தேடி சென்று ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
நீலக் குறிஞ்சி பூக்களை தேடி சென்று ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
ADDED : செப் 15, 2025 04:00 AM

மூணாறு : மூணாறில் பல பகுதிகளில் பரவலாக பூத்துள்ள நீலக்குறிஞ்சி பூக்கள் தேடிச் சென்று சுற்றுலாப் பயணிகள் ரசித்து வருகின்றனர்.
மூணாறில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் 'ஸ்டெரபாலந்தஸ் குந்தியானா' எனும் தாவரவியல் பெயர் கொண்ட நீலக் குறிஞ்சி பூக்கள் வெவ்வேறு பகுதிகளில் இரண்டு கட்டங்களாக பூத்து வருகின்றன. அவை இறுதியாக 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் பூத்தன. ஆண்டுதோறும் ஒரு சில பகுதிகளில் பூப்பதுண்டு. தற்போது மூணாறில் பொறியியல் கல்லூரி ரோடு, கிராம்ஸ்லாண்ட், மாட்டுபட்டி, கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப் ரோடு ஆகிய பகுதிகளில் பரவலாக பூத்துள்ளன. அவற்றை சுற்றுலாப் பயணிகள் தேடிச் சென்று ரசித்து செல்கின்றனர்.