/உள்ளூர் செய்திகள்/தேனி/ எஸ்.எஸ்.ஏ., திட்ட பணியாளர்களுக்கு ஐ.டி., உருவாக்கும் பணி தீவிரம் எஸ்.எஸ்.ஏ., திட்ட பணியாளர்களுக்கு ஐ.டி., உருவாக்கும் பணி தீவிரம்
எஸ்.எஸ்.ஏ., திட்ட பணியாளர்களுக்கு ஐ.டி., உருவாக்கும் பணி தீவிரம்
எஸ்.எஸ்.ஏ., திட்ட பணியாளர்களுக்கு ஐ.டி., உருவாக்கும் பணி தீவிரம்
எஸ்.எஸ்.ஏ., திட்ட பணியாளர்களுக்கு ஐ.டி., உருவாக்கும் பணி தீவிரம்
ADDED : செப் 15, 2025 04:00 AM
தேனி : ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையில் எஸ்.எஸ்.ஏ., திட்ட பணியாளர்களுக்கு ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., புதிதாக ஐ.டி. உருவாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் அரசுத் துறைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குதல், பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்திற்கு மாதந்தோறும் பணம் பிடித்தம் செய்தல், வருகை பதிவேடு உள்ளிட்ட விபரங்களை மேலாண்மை செய்ய கருவூலத்துறையால் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., சாப்டூவேர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் எஸ்.எஸ்.ஏ., (சமக்ரா சிக் ஷா அபியான்) திட்ட பணியாளர்கள் சி.பி.எஸ்., ஓய்வூதிய திட்டத்தில் இருந்தாலும் அவர்களுக்கு ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., சாப்டூவேரில் இதுவரை பணம் பிடித்தம் செய்யப்படாமல் இருந்தது.
மாதந்தோறும் சி.பி.எஸ்., பணத்தை பதிவு செய்து கருவூலத்தில் செலுத்தி வந்தனர். 'சலான்' மூலம் சி.பி.எஸ்., திட்டத்திற்கு பணம் செலுத்தும் முறை கடந்த மார்ச்சில் நிறுத்தப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறை மாநில திட்ட இயக்குநர் கருவூல கணக்குத்துறைக்கு கடிதம் எழுதி இருந்தார். இதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ஏ., பணியாளர்களுக்கு ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., சாப்டூவேரில்' ஐ.டி., உருவாக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அலைச்சல், நேர விரயம் தவிர்க்கப் படும்.
தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் பேர் பயனடைவர் என, எஸ்.எஸ்.ஏ., திட்டப் பணியாளர்கள் தெரிவித்தனர்.