/உள்ளூர் செய்திகள்/தேனி/காட்டு யானைகளை ரசித்த சுற்றுலா பயணிகள்காட்டு யானைகளை ரசித்த சுற்றுலா பயணிகள்
காட்டு யானைகளை ரசித்த சுற்றுலா பயணிகள்
காட்டு யானைகளை ரசித்த சுற்றுலா பயணிகள்
காட்டு யானைகளை ரசித்த சுற்றுலா பயணிகள்
ADDED : பிப் 24, 2024 05:28 AM

மூணாறு, : மூணாறு அருகே காட்டு யானைகளையும், அதன் குட்டி செய்த குறும்பையும் சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்தனர்.
மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள பெரியவாரை எஸ்டேட் பகுதியில் நேற்று காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை ஒரு குட்டி உள்பட ஆறு காட்டு யானைகளைக் கொண்ட கூட்டம் முகாமிட்டன. அவை அப்பகுதியில் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பின் அருகில் உள்ள மைதானத்தில் அவ்வப்போது சுற்றித் திரிந்தன.
அப்போது குட்டி யானை அங்கும், இங்கும் ஓடி குறும்பில் ஈடுபட்டதால் ஏற்பட்ட களைப்பில் உறங்கியது. அதனைச் சுற்றி யானைகள் அரண் போன்று பாதுகாப்பாக நின்றன.
அப்பகுதியில் ஒரு மாதம் இடைவெளிக்கு பிறகு காட்டு யானைகள் முகாமிட்டதால் அவற்றை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆகியோர் வெகுவாக ரசித்தனர்.