டிப்பர் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
டிப்பர் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
டிப்பர் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
ADDED : செப் 11, 2025 07:18 AM

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனுார் பொன் கிருஷ்ணன் 35. டிப்பர் லாரி டிரைவர். நேற்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்த அவர் ஆண்டிபட்டியில் இருந்து வைகை அணை அருகே உள்ள தனியார் கல்குவாரியில் ஜல்லிக்கற்கள் ஏற்றுவதற்காக டிப்பர் லாரியை ஓட்டிச் சென்றார்.
வைகை வனவியல் கல்லுாரி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டின் ஓரத்தில் கவிழ்ந்தது. இடிபாடுகளில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்த பொன்கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். வைகை அணை போலீசார் விசாரிக்கின்றனர்.