/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து
ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து
ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து
ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து
ADDED : செப் 11, 2025 07:19 AM
சின்னமனுார், : ஓடைப்பட்டியில் உள்ள தனியார் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து, சாம்பலானது.
ஓடைப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் தெரு தினேஷ். இவருக்கு சொந்தமான ரெடிமேட் ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று அருகில் உள்ள சுக்காங்கால்பட்டியில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு ரெடிமேட் நிறுவனத்தில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
தகவலின் பேரில் சின்னமனுார் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ரெடிமேட் ஆடைகள், தையல் இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.
தீயில் எரிந்து சாம்பலான பொருட்களின் மதிப்பு பற்றி மதிப்பீடு செய்யப்படுகிறது. ஓடைப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.