/உள்ளூர் செய்திகள்/தேனி/ரயில்வே வேலை வாங்கி தருவதாக தேனியில் ரூ.60 லட்சம் மோசடி: டிக்கெட் பரிசோதகர் கைதுரயில்வே வேலை வாங்கி தருவதாக தேனியில் ரூ.60 லட்சம் மோசடி: டிக்கெட் பரிசோதகர் கைது
ரயில்வே வேலை வாங்கி தருவதாக தேனியில் ரூ.60 லட்சம் மோசடி: டிக்கெட் பரிசோதகர் கைது
ரயில்வே வேலை வாங்கி தருவதாக தேனியில் ரூ.60 லட்சம் மோசடி: டிக்கெட் பரிசோதகர் கைது
ரயில்வே வேலை வாங்கி தருவதாக தேனியில் ரூ.60 லட்சம் மோசடி: டிக்கெட் பரிசோதகர் கைது
ADDED : ஜன 28, 2024 01:59 AM

தேனி: ரயில்வே வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரி இளைஞர்களிடம் ரூ.45 லட்சம், நிலம் விற்பனை செய்வதாக கூறி ரூ.15 லட்சம் என ரூ.60 லட்சம் மோசடி செய்த தேனியை சேர்ந்த ரயில்வே டிக்கெட் பரிசோதகர் பாலகிருஷ்ணனை 35, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தேனி அல்லிநகரம் ஒண்டிவீரன் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் ரயில்வே டிக்கெட் பரிசோதகராக பணிபுரிகிறார். இவரது மனைவி துர்காதேவி. இவர்கள் அதே பகுதியை சேர்ந்த துளசியிடம் ரயில்வேயில் டி.டி.ஆர்., வேலைக்கு ரூ.10 லட்சம் கொடுத்தால் வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.
துளசி, அதே பகுதியில் வசிக்கும் கட்டட தொழிலாளர்கள் பாப்பாத்தி, ஈஸ்வரியிடம் தெரிவித்தார். இவர்கள் மூலம் கொடுவிலார்பட்டியை சேர்ந்த கொத்தனார் முருகனுக்கு இத்தகவல் தெரிந்தது.
இதனை நம்பிய முருகன் 49, மகனுக்கு வேலை வாங்கி தர ரூ.5.70 லட்சம், பாப்பாத்தி ரூ.5.34 லட்சத்தை பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவியிடம் 2022 டிச.,ல் வழங்கினர். இருவரது மகன்களுக்கும் போலி பணி நியமன ஆணையை பாலகிருஷ்ணன் கொடுத்து, மருத்துவ பரிசோதனைக்காக அவர்களை மதுரைக்கு அழைத்து சென்று ஏமாற்றினார்.
தேனி கருப்பசாமியிடம் போடியில் உள்ள தன் இடத்தை கிரையம் செய்து கொடுப்பதாக கூறி ரூ.15 லட்சம் பெற்று மோசடி என மொத்தம் 26.05 லட்சம் வரை ஏமாற்றினார். முருகன் தேனி எஸ்.பி., யிடம் புகார் அளித்தார். குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் மாயா ராஜலட்சுமி மற்றும் போலீசார் டிக்கெட் பரிசோதகர் பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
விசாரணையில் பால கிருஷ்ணன் வேலை வாங்கி தருவதாக கூறி அல்லிநகரம் சுகனிடம் ரூ.9 லட்சம், மதுரை விஜயபாண்டி, சிவபிரபுவிடம் ரூ.20 லட்சம், கிஷோரிடம் ரூ.5 லட்சம் என ரூ.60 லட்சத்திற்கு மேல் மோசடி செய்தது தெரிந்தது.