ADDED : ஜூன் 11, 2025 07:31 AM
பெரியகுளம், : தேனியிலிருந்து பழநிக்கு டிக்கெட் எடுத்தவர் தூக்க கலக்கத்தில் தாமரைக்குளம் கல்லுரி விலக்கில் இறங்கினார். சிறுநீர் கழிக்க சென்றவரிடம் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகை வழிப்பறி செய்த 3 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், பூப்பாறை காலனியைச் சேர்ந்தவர் முருகன் 50. உறவினர் வீட்டு திருமணம் விசேஷத்திற்கு தேனியில் இருந்து பழநிக்கு அரசு பஸ்சில் சென்றார். தூக்க கலக்கத்தில் தாமரைக்குளம் காலேஜ் விலக்கு பஸ் ஸ்டாப்பில் இறங்கினார். ஆட்டோ ஸ்டாண்ட் பின்புறம் சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த கவுதம் 25. இவரது நண்பர்கள் சந்தோஷ்குமார் 26. செல்லப்பாண்டி 40, ஆகியோர் முருகனை அடித்து கீழே தள்ளி கழுத்தில் அணிந்திருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள ஒரு பவுன் தங்கச் செயின், சட்டைப்பையில் ரூ.2500 யை வழிப்பறி செய்தனர். புகாரில் தென்கரை எஸ்.ஐ., இதிரிஸ்கான் மூன்று பேரை கைது செய்தார்.-