/உள்ளூர் செய்திகள்/தேனி/ அவரையில் நோய் பாதிப்பு தோட்டக்கலைத்துறை ஆய்வு தினமலர் செய்தி எதிரொலி அவரையில் நோய் பாதிப்பு தோட்டக்கலைத்துறை ஆய்வு தினமலர் செய்தி எதிரொலி
அவரையில் நோய் பாதிப்பு தோட்டக்கலைத்துறை ஆய்வு தினமலர் செய்தி எதிரொலி
அவரையில் நோய் பாதிப்பு தோட்டக்கலைத்துறை ஆய்வு தினமலர் செய்தி எதிரொலி
அவரையில் நோய் பாதிப்பு தோட்டக்கலைத்துறை ஆய்வு தினமலர் செய்தி எதிரொலி
ADDED : ஜூன் 11, 2025 07:31 AM
தேனி : உத்தமபாளையம் தாலுகா, கோம்பை பகுதியில் அவரை சாகுபடியில் மஞ்சள் வைரஸ் பாதிப்பு குறித்து தினமலர் செய்தி எதிரொலியாக தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சில வாரங்களுக்கு முன் மஞ்சள் வைரஸ் நோயால் அவரை சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் பல விவசாயிகள் பயிர்களை அழிக்க துவங்கினர்.
மேலும் கோம்பை சுற்றுவட்டாரப்பகுதிகளில் மஞ்சள் வைரஸ் நோய் பாதிப்பு, தென்மேற்கு பருவமழையின் போது வீசிய பலத்த காற்றால் பூத்திருந்த பூக்கள் கொட்டியது. இதனால் மகசூல் பாதித்தது. விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று முன்தினம் வெளியானது. இச்செய்தி எதிரொலியாக தோட்டக்கலைத்துறை அலுவலர் பாலு நேற்று முன்தினம் கோம்பை, சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் தொழில்நுட்ப அலுவலர்கள், உயர் அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.