ADDED : ஜூன் 18, 2025 04:37 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி வைகை அணை ரோடு சிட்கோ அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக சென்ற ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை சோதனை செய்தனர். வாகனங்களில் சென்ற 3 பேரிடமும் தலா 50 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.
கஞ்சா வைத்திருந்தவர்கள் சக்கம்பட்டியை சேர்ந்த கணேஷ் பாண்டி 24, ஆண்டிபட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் 44, டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் 24, என்பது தெரிய வந்தது.
மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களின் ஆட்டோ, இருசக்கர வாகனம் மற்றும் 3 பேரின் மொபைல் போன்களையும் பறிமுதல் செய்தனர்.