ADDED : ஜூன் 18, 2025 04:38 AM
தேனி: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூன் 20ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10:00 மணி முதல் நடக்கிறது.
முகாமில் மாவட்டத்தை சேர்ந்த கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு, அதற்கு கீழ் கல்வித்தகுதி, பட்டபடிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., நர்சிங், தையல் பயிற்சி முடித்தவர்கள் பங்கேற்கலாம். வேலை நாடுநர்கள் தங்கள் சுயவிபர குறிப்பு நகல், கல்விச்சான்றிதழ்கள் நகல்களுடன் பங்கேற்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 79047 06709 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.