/உள்ளூர் செய்திகள்/தேனி/ வனப்பகுதியில் மரம் வெட்டிய மூவர் கைது வனப்பகுதியில் மரம் வெட்டிய மூவர் கைது
வனப்பகுதியில் மரம் வெட்டிய மூவர் கைது
வனப்பகுதியில் மரம் வெட்டிய மூவர் கைது
வனப்பகுதியில் மரம் வெட்டிய மூவர் கைது
ADDED : செப் 18, 2025 05:14 AM
போடி : போடி ஜே.கே., பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் 40. ராசிமலையை சேர்ந்தவர்கள் அமர்நாத் 21, சுந்தரம் 22. மூவருக்கும் கொட்டகுடி ஊராட்சி காரிப்பட்டியில் காபி தோட்டம் உள்ளது.
இவர்களது தோட்டத்திற்கு செல்ல பாதை வசதி இல்லை. பாதை அமைப்பதற்காக காப்புகாடு வனப் பகுதியில் இருந்த மரங்களை வெட்டி பாதை அமைத்து உள்ளனர்.
தகவல் அறிந்த உதவி வன பாதுகாவலர் சிசில் கில்பர்ட் தலைமையில் போடி ரேஞ்சர் நாகராஜ், வனவர் அன்பரசன், வனக்காப்பாளர் விஜய் ஆனந்த், வேட்டை தடுப்பு காவலர் சுகந்தன் ஆகியோர் சென்று முத்துக்குமார், அமர்நாத், சுந்தரம் ஆகிய மூவரையும் கைது செய்து மரம் வெட்டுவதற்கு பயன்படுத்திய மண்வெட்டி, கடப்பாரையினை பறிமுதல் செய்தனர்.