/உள்ளூர் செய்திகள்/தேனி/ போடி ரயில்வே ஸ்டேஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு போடி ரயில்வே ஸ்டேஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு
போடி ரயில்வே ஸ்டேஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு
போடி ரயில்வே ஸ்டேஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு
போடி ரயில்வே ஸ்டேஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு
ADDED : செப் 18, 2025 04:48 AM

போடி: மதுரை --- போடி மின்சார ரயில் இயக்கம் குறித்து நேற்று போடி ரயில்வே ட்ராக், ரயில்வே சுரங்க பாதையில் நீர் கசிவு, மின் விநியோகம் குறித்து மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்தார்.
மதுரை - போடி மின்சார ரயில் ஏழு மாதங்களுக்கு முன்பு இயங்க துவங்கியது. நேற்று மதுரையில் இருந்து இன்ஸ்பெக் ஷன் கார் ரயில் மூலம் போடி ரயில்வே ஸ்டேஷனுக்கு மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வுக்காக வந்தார்.
இத் தடத்தில் உள்ள இருப்பு பாதையில் உள்ள ட்ராக், போடியில் ரயில்வே சுரங்கப்பாதையில் நீர் கசிவு, பயணிகள் பிளாட்பாரம், ரயில்வேக்கு சொந்தமான இடம், தீயணைப்பு எச்சரிக்கை அலாரம் கருவி, மின் வினியோகம், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திர அறை, ரயில் ஓட்டுநர்கள் ஓய்வு அறை, போலீஸ் ஸ்டேஷன், மாற்றுத் திறனாளிகளுக்கான சுகாதார வளாகம், குடிநீர் விநியோகம் குறித்து ஆய்வு செய்தார்.
பிளாட் பாரத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் சேதம், குப்பை தேக்கம், பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம் பற்றி அறிந்து அதிகாரிகளை கடிந்து கொண்டார்.
ரயில்வே ஸ்டேஷன் விளம்பர பலகையை காட்டிலும் தனியார் நிறுவனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது பெரிய அளவில் விளம்பர பலகை அமைத்தது குறித்து அதிகாரியிடம் விளக்கம் கேட்டார்.
மூத்த கோட்ட பொறியாளர் கார்த்திக், மூத்த இயக்குதல் பிரிவு மேலாளர் சிவா உட்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
ஆண்டிபட்டி ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு செய்தனர்.
போடியில் இருந்து மதுரைக்கு காலை 8:30 மணிக்கும், மதுரையில் இருந்து போடிக்கு மாலை 6:00 மணிக்கு ரயில் இயக்க வேண்டும்.
போடி - - சென்னை தினசரி ரயில் இயக்க வேண்டும். ராமேஸ்வரம், கோவைக்கு போடியில் இருந்து ரயில் இயக்கவும், போடி ரயில்வே ஸ்டேஷனில் ஏலக்காய்க்கு வேர் ஹவுஸ், கூடுதல் பிளாட் பாரம் அமைக்க வேண்டும் என தேனி மாவட்ட ரயில்வே ரயில் பயனாளர்கள் சங்கம் சார்பில் மனு கொடுத்தனர்.