/உள்ளூர் செய்திகள்/தேனி/ இந்த ஆண்டும் கானல் நீரான 18ம் கால்வாய் சீரமைப்பு பணி நிதி ஒதுக்கியும் பயன் இல்லை இந்த ஆண்டும் கானல் நீரான 18ம் கால்வாய் சீரமைப்பு பணி நிதி ஒதுக்கியும் பயன் இல்லை
இந்த ஆண்டும் கானல் நீரான 18ம் கால்வாய் சீரமைப்பு பணி நிதி ஒதுக்கியும் பயன் இல்லை
இந்த ஆண்டும் கானல் நீரான 18ம் கால்வாய் சீரமைப்பு பணி நிதி ஒதுக்கியும் பயன் இல்லை
இந்த ஆண்டும் கானல் நீரான 18ம் கால்வாய் சீரமைப்பு பணி நிதி ஒதுக்கியும் பயன் இல்லை
ADDED : செப் 20, 2025 11:57 PM

கூடலுார்: 18ம் கால்வாயில் அக். முதல் வாரத்தில் தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், சீரமைப்பு பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து கூடலுார், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் வழியாக போடி வரை செல்லும் 18ம் கால்வாய் திட்டம் 47 கி.மீ., நீளம் கொண்டதாகும். இத்திட்டத்தின் மூலம் 4765 ஏக்கர் நிலப்பரப்பில் பாசன வசதி பெறுகிறது.
இது தவிர 43 கண்மாய்கள் நிரம்புவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஆயிரக்கணக்கான ஏக்கரில் மறைமுக பாசனமும் நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து அக். முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பது வழக்கம்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் செப்டம்பரிலும், அதற்கு முந்தைய ஆண்டு ஆகஸ்டிலும் திறக்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீர்மட்டம் திருப்திகரமாக இருந்த போதிலும் இரண்டு மாதத்திற்கு மேல் தாமதமாக டிசம்பரில் திறக்கப்பட்டது.
தண்ணீர் திறக்கும் போது பல இடங்களில் கரைப்பகுதி உடைப்பு ஏற்பட்டு வீணாக தண்ணீர் வெளியேறியது. மணல் மூடைகள் அடுக்கி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் சீரமைப்பு பணிக்காக ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்வதாக அரசு அறிவித்தது. ஆனால் சீரமைப்பு பணிகள் துவங்கவில்லை.
இந்நிலையில் செப்.19ல் தேனியில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அக்.முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும் என டி.ஆர்.ஓ., அறிவித்தார். இரண்டு வாரங்களே உள்ள நிலையில் கரைப்பகுதி சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சீரமைப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி வீணாகுமா என்ற நிலையும் உருவாகியுள்ளது.
ஏற்கனவே தலைமதகுப் பகுதி, தொட்டி பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. அதனால் இந்த ஆண்டும் கடைமடை வரை முழுமையாக தண்ணீர் செல்லுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.