/உள்ளூர் செய்திகள்/தேனி/நகராட்சி துணைத் தலைவருக்கு சொந்தக் கட்சியில் கடும் எதிர்ப்புநகராட்சி துணைத் தலைவருக்கு சொந்தக் கட்சியில் கடும் எதிர்ப்பு
நகராட்சி துணைத் தலைவருக்கு சொந்தக் கட்சியில் கடும் எதிர்ப்பு
நகராட்சி துணைத் தலைவருக்கு சொந்தக் கட்சியில் கடும் எதிர்ப்பு
நகராட்சி துணைத் தலைவருக்கு சொந்தக் கட்சியில் கடும் எதிர்ப்பு
ADDED : ஜன 31, 2024 01:07 AM

பெரியகுளம்:தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி துணைத் தலைவரான தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா முகமது, மீது, அதே கட்சியைச் சேர்ந்த நகராட்சி தலைவர் சுமிதா மற்றும் 23 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் வழங்கினர்.
பெரியகுளம் நகராட்சியின் 29 வார்டுகளில் தி.மு.க.,- - 14, அ.தி.மு.க., - -6, மார்க்சிஸ்ட் - 1, அ.ம.மு.க.,- - 3. வி.சி.-, -2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1, அகில இந்திய பார்வர்டு பிளாக் - -1, பா.ம.க.,- -1 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளன.
பெரியகுளம் நகராட்சி கூட்டம் அதன் தலைவர் சுமிதா தலைமையில் நேற்று முன் தினம் நடந்தது.
அ.ம.மு.க., கவுன்சிலர்கள் வெங்கடேசன், பால்பாண்டி ஆகியோர் பேசும் போது, 'நகராட்சி துணைத் தலைவர் ராஜாமுகமது நகராட்சியையும், கவுன்சிலர்களையும் பொது இடங்களில் அவதூறாக பேசுகிறார்.
'எனவே, அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர்.
தி.மு.க., பா.ம.க., மார்க்சிஸ்ட், வி.சி., அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உட்பட 23 கவுன்சிலர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த அவரது தம்பி ஓ.சண்முக சுந்தரம், குருசாமி, ராணி ஆகியோர் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து கூட்டம் 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின் நம்பிக்கையில்லா தீர்மான ஆதரவு கடிதத்தில் தலைவர் சுமிதா, 23 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டனர். சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக கூறி கமிஷனர் மீனாவிடம் தலைவர் கடிதம் கொடுத்தார்.
அந்தக் கடிதம் மதுரை மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு அனுப்ப உள்ளதாக கமிஷனர் கூறினார்.