/உள்ளூர் செய்திகள்/தேனி/ கனமழையால் அணைப் பிள்ளையார் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு கனமழையால் அணைப் பிள்ளையார் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு
கனமழையால் அணைப் பிள்ளையார் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு
கனமழையால் அணைப் பிள்ளையார் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு
கனமழையால் அணைப் பிள்ளையார் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு
UPDATED : மே 26, 2025 03:12 AM
ADDED : மே 26, 2025 02:46 AM

போடி: போடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதோடு, அணைப்பிள்ளையார் அணையில் நீர் அருவியாய் கொட்டி வருகிறது.
போடி பகுதியில் மே துவங்கியும் மழை பெய்யாமல் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் கொட்டகுடி ஆற்றுப் பகுதியில் நீர் வரத்து இன்றி, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, நிலங்களும் வறண்டு காணப்பட்டன. நெல், சிறு தானியங்கள் பயறு வகைகள், பருத்தி, தோட்டப் பயிர்கள் ஏக்கர் கணக்கில் பயிரிட்ட விவசாயிகள் கலக்கத்தில் இருந்தனர்.
போடி பகுதியில் கடந்த வாரம் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கேரளா, குரங்கணி, கொட்டகுடி, போடி, சிலமலை, சூலப்புரம், ராசிங்காபுரம் பகுதியில் கனமழை பெய்தது. போடி காமராஜ் பஜார், போஜன் பார்க் மெயின் ரோட்டில் மழைநீர் சிறு ஓடை போல பெருக்கெடுத்துச் சென்றது. கொட்டகுடி ஆற்றுப் பகுதியில் நீர்வரத்து வர துவங்கிய நிலையில் போடி பங்காருசாமி நாயக்கர் கண்மாய், சங்கரப்பன் கண்மாய், மீனாட்சியம்மன் கண்மாய் பகுதிகளுக்கு நீர்வரத்து வந்த நிலையில் உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
போடி மூணாறு செல்லும் முந்தல் ரோட்டில் உள்ள அணைப்பிள்ளையார் அணை ஆற்றுப் பகுதியில் தடுப்பணையை தாண்டி நீர் அருவியாய் கொட்டி வருகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகள், மக்களும் குளித்து அலை பேசியில் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். நீர்வரத்து அதிகரித்து வருவதால் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.