Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ 'மாசில்லா பெரியகுளம்' துாக்கணாங்குருவிக் கூடுகள் போல செடிகள்; குழந்தைகளை காக்கும் சீர்பச்சிலை * விழிப்புணர்வில் ஏற்படுத்தும் தென்கரை தம்பதி

'மாசில்லா பெரியகுளம்' துாக்கணாங்குருவிக் கூடுகள் போல செடிகள்; குழந்தைகளை காக்கும் சீர்பச்சிலை * விழிப்புணர்வில் ஏற்படுத்தும் தென்கரை தம்பதி

'மாசில்லா பெரியகுளம்' துாக்கணாங்குருவிக் கூடுகள் போல செடிகள்; குழந்தைகளை காக்கும் சீர்பச்சிலை * விழிப்புணர்வில் ஏற்படுத்தும் தென்கரை தம்பதி

'மாசில்லா பெரியகுளம்' துாக்கணாங்குருவிக் கூடுகள் போல செடிகள்; குழந்தைகளை காக்கும் சீர்பச்சிலை * விழிப்புணர்வில் ஏற்படுத்தும் தென்கரை தம்பதி

ADDED : மே 26, 2025 02:45 AM


Google News

பெரியகுளம்


தென்கரை மாரியம்மன் சன்னதி தெரு சோமசுந்தரம். இவரது மனைவி ராஜாமணி. இத்தம்பதியின் மகள் மரகதவல்லி, ஐ.டி., கம்பெனி பணியாளர். மகன் பள்ளி மாணவர் கனகசபை. இவர்களது குடும்பத்தின் கூட்டு முயற்சியால் 'அம்பாள் பசுமை இல்லம்' என்ற பெயரில் மாடித்தோட்டம் அமைத்துள்ளனர். இதில் மூன்றாவது மாடியில் செடிகளுக்கு நடுவே ஏராளமான சிட்டுக்குருவிகள் இளைப்பாற, துாக்கணாங்குருவிக் கூடுகள் அமைப்பில் செடிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. வீட்டின் முதல் மாடியில் துவக்கத்தில் ஆரம்பமாகும் 'மணி பிளாண்ட்' செடிகள், மூன்றாவது மாடி வரை 20 அடி துாரம் பசுமையாக பயணிக்கிறது. மஞ்சள், ஆளுயர செழித்து வளர்ந்துள்ள வெற்றிலை, துாதுவளை, கறிவேப்பிலை, குழந்தைகளுக்கு சீரடிக்காமல் தடுக்கும் சீர்பச்சிலை, மருத்துவம் குணம் வாய்ந்த துணிச்சி பச்சிலை, செம்பருத்தி, துளசி, ரோஸ், மல்லிகை, சங்குப்பூ, மருதாணி, ஓமவல்லி, மாதுளை, புதினா, பச்சை மிளகாய் செடிகள் என, இவர்கள் மாடித்தோட்டத்தில் வளர்ந்துள்ள தாவரங்களின் பட்டியல் அதிகம்.

சிட்டுக்குருவிகள் ரீங்காரம்':

சோமசுந்தரம் (மாடித்தோட்ட ஆலோசகர்), பெரியகுளம்:

தொழிலில் ஏராளமான சவால்கள் நிறைந்துள்ளது. தினமும் காலை சூரிய நமஸ்காரம் மாடித்தோட்டத்தில் உள்ள இடத்தில் செய்கிறேன். அங்கு தங்கியுள்ள ஏராளமான சிட்டுக் குருவிகளின் ரீங்காரம், மனதை வருடுகிறது. அங்கு சிறிது நேரம் தியானம் செய்யும் போது இயற்கையாகவே புத்துணர்வு ஏற்படுகிறது. அன்றைய பொழுது சுறுசுறுப்பாக இயங்க இச்சூழல் உதவுகிறது. இரு வாரங்களுக்கு ஒரு முறை புதிய செடியின் தேர்வு செய்து, அதனை வாங்கி வந்து நடவு செய்து வளர்ப்பதையும், அந்த செடிகள் குறித்து அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளோம். மாடித்தோட்டம் எங்களை பொறுத்தவரை 'புத்துணர்வு தோட்டம்'., என்றார்.

இயற்கை உரம் தயாரிக்கிறோம்: ராஜாமணி, இல்லத்தரசி, பெரியகுளம்:


மாடித்தோட்டத்தில் விழுகின்ற இலைகள், காய்கறி கழிவுகள் மக்கச்செய்தும், ஆட்டுச்சாணம், மாட்டுச்சாணத்தை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரித்து பயன்படுத்துகிறோம். வாழைப் பழத்தோல், முருங்கை இலைப்பொடி ஆகியவற்றை அடி உரமாகவும், சுண்டலை ஊற வைத்த நீர், அரிசி ஊற வைத்த நீர், புளித்த மோர் ஆகியவற்றை செடிகளுக்கு ஊற்றி, எவ்வித நோய் அண்டாமல் பார்த்து கொள்கிறோம். தினமும் காலையில் செடிகளை பார்த்து, பராமரிக்காமல் உறங்குவதில்லை. எனது மகள் மரகதவல்லி ஐ.டி., கம்பெனியில் 'ஒர்க் பிரம் ஹோம்' பணியாற்றுகிறார். பணி இல்லாத போது இடைவெளி கிடைக்கும் நேரத்தில் செடிகள் பராமரிப்பு குறித்து கற்றுத் தருகிறோம். வருங்கால இளைய சமுதாயத்தினரும் மாடித்தோட்டம் அமைக்கவும், இயற்கையை நேசிக்கவும் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டு விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறோம்., என்றார்.

--





      Our Apps Available On




      Dinamalar

      Follow us