ADDED : ஜன 05, 2024 04:59 AM
குடும்ப பிரச்னையில் தற்கொலை
தேனி: பழனிச்செட்டிபட்டி மகாத்மாகாந்தி தெரு முத்து 37. அதேப்பகுதி முத்துமாரியுடன் 30, திருமணம் நடந்தது. மகன் சிவனேஷூடன், முத்துமாரி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். சம்பவ நாளில் வீட்டில் மகன் சிவனேஷ் அலைபேசி பார்த்துக் கொண்டிருந்தார். அதனை முத்து கண்டித்தார். இதனால் கணவனுக்கு, மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மனைவியை தாக்கி கீழே தள்ளினார். பின் ஆத்திரமடைந்த முத்து, வீட்டில் துாக்கிட்டார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவர் தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சேர்க்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தார். இறந்த முத்துவின் தாய் முத்துககாமாட்சி புகாரில், பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
டிராக்டர் டயர் திருட்டு
தேனி: கோவிந்தநகரம் மிதுன்ராம் 28. இவருக்கு கண்டமனுார் முதல் கோவிந்தநகரம் செல்லும் ரோட்டில் புதிதாக கட்டிய கோடவுன் உள்ளது. அதில் டிராக்டரை டிச.6ல் இரவு 8:00 மணிக்கு நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் காலை 8:00 மணிக்கு கோடவுனில் நிறுத்தியிருந்த டிராக்டரின் பெரிய டயர்கள் திருடப்பட்டு இருந்தன. புகாரில் கண்டமனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் மோதி ஒருவர் பலி
தேனி: -சின்னமனுார் ராதாகிருஷ்ணன் ரைஸ்மில் தெரு விஜயன் 45. இவர் சின்னமனுார் சிவபுரத்தில் வசிக்கும் ஹரிகரன் வீட்டில் கட்டுமானப் பணி செய்து வந்தார். அவருடன் விஜயனின் மைத்துனர், கேரள மாநில இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் கொத்தனார் பாஸ்கரன் 55, பணிபுரிந்து கட்டடத்தில் தங்கி வந்தனர். இந்நிலையில் பாஸ்கரன் சின்னமனுார் - சீப்பாலக்கோட்டை ரோட்டின் ஓரத்தில் தங்கியுள்ள கட்டடத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அதேப்பகுதி காந்திநகர் காலனி ரஞ்சித் 25, ஓட்டி வந்த டூவீலர் பாஸ்கரன் மீது அதிவேகமாக மோதி விபத்து நடந்தது. இதில் பலத்த காயம் அடைந்துஆ சம்பவ இடத்தில் பலியானார். சின்னமனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.