/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேனியில் மாற்று வழித்தடம் இன்றி மேம்பால பணியில் தொய்வு தேனியில் மாற்று வழித்தடம் இன்றி மேம்பால பணியில் தொய்வு
தேனியில் மாற்று வழித்தடம் இன்றி மேம்பால பணியில் தொய்வு
தேனியில் மாற்று வழித்தடம் இன்றி மேம்பால பணியில் தொய்வு
தேனியில் மாற்று வழித்தடம் இன்றி மேம்பால பணியில் தொய்வு
ADDED : ஜூன் 14, 2025 05:53 AM

தேனி,: தேனி நகர்பகுதியில் மாற்று வழித்தடம் இல்லாததால் மேம்பால பணிகள் தொய்வாக நடந்து வருகிறது.
தேனி நகர்பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரயில்வே மேம்பால பணிகள் இரு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. பாலத்தில் தேனி, புது பஸ் ஸ்டாண்ட், மதுரை ரோடு ஆகிய மூன்று பகுதிகளில் இருந்து வாகனங்கள் மேலே சென்று வரும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. தற்போது அரண்மனைப்புதுார் பகுதி, மதுரை ரோடு சிப்காட் பகுதியில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து விட்டது.
ஆனால், புது பஸ் ஸ்டாண்ட் ரயில்வே கேட் ரோட்டில் பணிகள் துவங்க வில்லை. ஆனால் ரயில்வே தண்டவாளம் மீது பொருத்தப்படும் கர்டர்கள் தயாராகவில்லை என காரணம் கூறி தேசிய நெடுஞ்சாலைத்துறை யினர் காலம் கடத்துகின்றனர்.
புது பஸ் ஸ்டாண்ட்- ரயில்வே கேட் ரோட்டில் பணி துவங்கினால், போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்படும். பஸ்கள் அன்னஞ்சி விலக்கு, அல்லிநகரம் வழியாக செல்ல வேண்டும். ஆனால், சிலர் என்.ஆர்.டி., நகர், சிவாஜி நகர் வழியாக செல்ல முற்படுவார்கள். பலமுறை போக்குவரத்து மாற்றும் செய்தும் பலனின்றி உள்ளது. நகர்பகுதியில் கம்பம் ரோடு, மதுரை ரோடு, சுப்பன்செட்டிதெரு என பல பகுதிகளில் உள்ள திட்டசாலைகள் பயன்பாட்டிற்கு வராதது, ஆக்கிரமிப்புகளால் மாற்று வழிப்பாதை அமல்படுத்துவது சிக்கிலாகி உள்ளது.