/உள்ளூர் செய்திகள்/தேனி/ குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின ஊர்வலம் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின ஊர்வலம்
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின ஊர்வலம்
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின ஊர்வலம்
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின ஊர்வலம்
ADDED : ஜூன் 14, 2025 05:53 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளி சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின ஊர்வலம் நடந்தது. குழந்தை தொழிலாளர் இல்லாத நாட்டை உருவாக்கவும் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை உறுதிப்படுத்தும் விதமாகவும் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம், செயலர் தமயந்தி ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி வாழ்த்தி பேசினார்.
கொண்டமநாயக்கன்பட்டியில் துவங்கிய ஊர்வலம் மெயின் ரோடு வழியாக ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் முடிந்தது.
மாணவ மாணவிகள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பை வலியுறுத்தும் வாசகங்கள் கொண்ட பதாகைகள் ஏந்தி கோஷமிட்டு சென்றனர். ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி மாத்யூ ஜோயல் தலைமையில் ஆசிரியைகள் பூமா, ராகினி, திவ்யா, பாண்டிச்செல்வி, கவிதா உட்பட பல செய்திருந்தனர்.