/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேனி டாக்டருக்கு அசாமில் பயிற்சி நோய், வலி தணிப்பு சிகிச்சை வசதி தேனி டாக்டருக்கு அசாமில் பயிற்சி நோய், வலி தணிப்பு சிகிச்சை வசதி
தேனி டாக்டருக்கு அசாமில் பயிற்சி நோய், வலி தணிப்பு சிகிச்சை வசதி
தேனி டாக்டருக்கு அசாமில் பயிற்சி நோய், வலி தணிப்பு சிகிச்சை வசதி
தேனி டாக்டருக்கு அசாமில் பயிற்சி நோய், வலி தணிப்பு சிகிச்சை வசதி
ADDED : செப் 14, 2025 04:03 AM

கம்பம்: அசாமில் டாடா கேன்சர் கேர் பவுண்டேசன், தேசிய சுகாதார இயக்கத்துடன் இணைந்து வழங்கிய நோய் மற்றும் வலி தணிப்பு பயிற்சியில் தேனி மாவட்ட டாக்டர் பாரதி பங்கேற்றுள்ளார்.
தேசிய அளவில் பல்வேறு நோய் காரணமாக ஏற்படும் வலியை குறைப்பதற்கு மருந்து மாத்திரைகள் தரப்படுகிறது.
இடைக்கால நிவாரணமாக பயன்படும் மருந்து மாத்திரைகளால் தற்காலிக வலி நிவாரணியாக தான் பயன்படும்.
அகில இந்திய அளவில் இதற்கு தீர்வு காண மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி தேசிய சுகாதார இயக்கம் அசாமில் இயங்கி வரும் டாடா கேன்சர் கேர் பவுண்டேசனும் இணைந்து அகில இந்திய பயிற்சி பட்டறை நடத்தியது.
அதில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் 26 டாக்டர்கள் பயிற்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் இருந்து சென்னை மருத்துவக் கல்லூரி டாக்டர் கணேசன், பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் புற்றுநோய் தடுப்பு டாக்டர் பாரதி தேர்வாகினர்.
இவர்களுக்கு செப். 9 முதல் 12 வரை அசாமில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை பயன்படுத்தி பிற டாக்டர்களுக்கு பயிற்சி வழங்க பொதுச் சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
இது குறித்து டாக்டர் பாரதி கூறுகையில், 'கேன்சர் நோயால் ஏற்படும் வலி மட்டுமல்லாமல் நாள்பட்ட மூட்டு வலி, குறுக்கு வலி, நாள்பட்ட நோய்களால் ஏற்படும் வலி, பக்கவாதம் வந்து நீண்ட நாட்களாக படுக்கையில் இருப்பவர்களுக்கு ஏற்படும் வலி உள்ளிட்ட பல்வேறு வலிகள் தணிப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியை பயன்படுத்தி நாள்பட்ட நோய்களால் ஏற்படும் வலி இல்லாமல் செய்ய முடியும். நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு வழி கிடைக்கும்.
பிற டாக்டர்களுக்கு பயிற்சியளிக்கும் திட்டம் உள்ளது என நினைக்கின்றேன். காரணம் அங்கு ட்ரெயினர் பார் டிரெயினிங் (Trainer For Training) என்ற வகையில் தான் அந்த பயிற்சி இருந்தது என்றார்.