/உள்ளூர் செய்திகள்/தேனி/ 22 ஆயிரம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்க முடிவு 22 ஆயிரம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்க முடிவு
22 ஆயிரம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்க முடிவு
22 ஆயிரம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்க முடிவு
22 ஆயிரம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்க முடிவு
ADDED : செப் 14, 2025 04:02 AM
கம்பம்: கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் ஒன்றியங்களில் விவசாயிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இந்தாண்டு 22,500 மரக்கன்றுகள் இலவசமாக வழங்க வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தை பசுமைப் போர்வைக்குள் கொண்டு வர மரம் வளர்க்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வனத்துறையின் ஒரு பிரிவான வருஷநாடு மண்வள பாதுகாப்பு சரகம் சார்பில் ஆண்டுதோறும் மரக் கன்றுகளை வளர்த்து விவசாயிகள் மற்றும் கல்வி கூடங்கள், அரசு மருத்துவமனைகள். பொது நிறுவனங்கள் என பல தரப்பினருக்கு வழங்கி மரம் வளர்ப்பை ஊக்குவித்து வருகின்றனர்.
அத் திட்டத்தின்படி இந்தாண்டு 22,500 மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு 20 ஆயிரம் கன்றுகளும், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற தொழில் நிறுவனங்களுக்கு 2500 மரக்கன்றுகளும் விநியோகம் செய்ய உள்ளனர். விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 200 கன்றுகள் வழங்குகின்றனர்.
ரேஞ்சர் சந்தியா கூறுகையில், 'விவசாயிகளுக்கு தேக்கு, குமிழ், மகாகனி, செம்மரம் போன்றவைகளும், கல்வி நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளுக்கு பாதாம், வேம்பு, புங்கன், மகாகனி, நாவல், நீர் மருது போன்ற மரக் கன்றுகளும் வழங்குகிறோம். கம்பம், உத்தம பாளையம், சின்னமனூர் ஒன்றிய பகுதிகளில் மரக்கன்றுகள் வழங்குகிறோம். விரும்புவோர் சின்னமனூர் வனச்சரக அலுவலக வளாகத்தில் உள்ள வருஷநாடு மண்வள வனச்சரக அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.