Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ ரயில்வே வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.11 கோடி மோசடி தேனி கிரிக்கெட் வீரர் கைது

ரயில்வே வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.11 கோடி மோசடி தேனி கிரிக்கெட் வீரர் கைது

ரயில்வே வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.11 கோடி மோசடி தேனி கிரிக்கெட் வீரர் கைது

ரயில்வே வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.11 கோடி மோசடி தேனி கிரிக்கெட் வீரர் கைது

ADDED : ஜூன் 01, 2025 01:06 AM


Google News
Latest Tamil News
தேனி:தேனியில் ரயில்வே வேலை வாங்கித்தருவதாக கூறி 8 பேரிடம் ரூ.1.11 கோடி பெற்று போலி பணி ஆணை வழங்கிய வழக்கில் கிரிக்கெட் பயிற்சியாளர் பூகிஸ்வரன் கைதான நிலையில் கிரிக்கெட் வீரர் குகன்ராஜாவை 40, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பொறியியல் பட்டதாரி சிவபாலன். இவரது உறவினர் தேனி ஊஞ்சாம்பட்டி ஜெயம்நகர் குகன்ராஜா. கிரிக்கெட் வீரரான இவர் மூலம் சென்னை ஆவடி பள்ளிவாசல் தெரு கிரிக்கெட் பயிற்சியாளர் பூகிஸ்வரன், அவரது மனைவி ஜெயஸ்ரீ அறிமுகமாயினர். அரசியல்வாதிகள், அதிகாரிகளை தெரியும் எனவும், ரூ.15 லட்சம் கொடுத்தால் ரயில்வே வேலை வாங்கி தருவதாகவும் கூறினர்.

அதனை நம்பி சிவபாலன், அவரது நண்பர்கள், உறவினர்கள் என 8 பேர் ரூ.38.61 லட்சம், வங்கி கணக்கு மூலம் ரூ.73.28 லட்சம் என மொத்தமாக ரூ.ஒரு கோடியே 11லட்சத்து 89 ஆயிரத்து 500 வழங்கினர்.பணம் வழங்கியவர்களை வடமாநிலங்களுக்கு அழைத்து சென்றனர். பின் 8 பேருக்கும் போலி பணி ஆணை வழங்கினர். ஏமாற்றமடைந்த சிவபாலன் உள்ளிட்ட 8 பேரும் போலீஸ் எஸ்.பி.,யிடம் 2024 மார்சில் புகார் அளித்தனர்.

குற்றப்பிரிவு போலீசார் பூகீஸ்வரன், ஜெயஸ்ரீ, குகன்ராஜா மீது வழக்கு பதிந்தனர். சென்னையில் 2024 ஆக.,ல் பூகீஸ்வரனை கைது செய்தனர். குகன்ராஜாவை நேற்று கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us