ADDED : ஜூன் 01, 2025 02:50 AM

கூடலுார்: நீலகிரி மாவட்டம், கூடலுாரில், மைசூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட், கடந்தாண்டு பிப்ரவரியில் திறக்கப்பட்டது.
தற்போதைய பருவமழையில், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் ஆங்காங்கே மழைநீர் குளம் போல தேங்கியது. பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணியர் கடும் சிரமத்திற்கு இடையே சென்று வந்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை சீரமைக்கக் கோரி, கூடலுார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் மற்றும் கூட்டணி கட்சியினர், தரையில் அமர்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலுார் டி.எஸ்.பி., போக்குவரத்து கழக கிளை மேலாளர் அருள் கண்ணன் ஆகியோர் எம்.எல்.ஏ.,வுடன் பேச்சு நடத்தியதை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர்.