ADDED : பிப் 25, 2024 04:35 AM

தேனி : இடுக்கி மாவட்டம் குமுளியை சேர்ந்தவர் அபுபக்கர். இவர் துாத்துக்குடியில் இருந்து சிமென்ட் மூடைகளை லாரியில் ஏற்றி தேனி வழியாக குமுளி சென்றார்.
லாரி உப்பார்பட்டி டோல்கேட் அருகே சென்ற போது நாய் குறுக்கே வந்தது. நாய்மீது மோதமல் இருக்க டிரைவர் லாரியை வலது புறம் திருப்பினார். இதில் லாரி ரோட்டின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. லாரியின் உள்ளபகுதியில் டிரைவர் சிக்கினார், பள்ளத்தில் சிமென்ட் மூடைகள் சிதறின.காயமடைந்த டிரைவர் நெடுஞ்சாலை ரோந்து ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். லாரி உரிமையாளர் இடுக்கி வளியகண்டம் ஷாருக் அகமது புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.