/உள்ளூர் செய்திகள்/தேனி/வருவாய்த் துறையினர் காத்திருப்பு போராட்டம் மக்கள் பாதிப்புவருவாய்த் துறையினர் காத்திருப்பு போராட்டம் மக்கள் பாதிப்பு
வருவாய்த் துறையினர் காத்திருப்பு போராட்டம் மக்கள் பாதிப்பு
வருவாய்த் துறையினர் காத்திருப்பு போராட்டம் மக்கள் பாதிப்பு
வருவாய்த் துறையினர் காத்திருப்பு போராட்டம் மக்கள் பாதிப்பு
ADDED : பிப் 24, 2024 04:55 AM

தேனி : மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், காத்திருப்பு போராட்டத்தால் அரசு பணிகள் முடங்கி பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சங்கம் சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்., 22 முதல் அரசு பணிக்கு வந்து கையெழுத்திட்டு பணி புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட துணைத் தலைவர் வீரக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் ஓச்சாத்தேவன் முன்னிலை வகித்தார்.
வட்டக்கிளை தலைவர் சதீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தேனி தாலுகா அலுவலகத்தில் மகளிர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி மாங்கனி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சின்னக்காளை, வட்டக்கிளை தலைவர் இந்திரா முன்னிலை வகித்தனர்.
இப்போராட்டம் தாலுகா அலுவலகங்கள், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் நடந்த காத்திருப்பு போராட்டத்தில் 147 வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். இதனால் வருவாய் துறை அலுவலங்களில் பட்டா மாறுதல், ரேஷன் கார்டு திருத்தப்பணிகள் பணிகள் முடங்கின. இதனால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.