/உள்ளூர் செய்திகள்/தேனி/மூணாறு ஊராட்சியில் தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றிமூணாறு ஊராட்சியில் தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி
மூணாறு ஊராட்சியில் தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி
மூணாறு ஊராட்சியில் தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி
மூணாறு ஊராட்சியில் தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி
ADDED : ஜன 31, 2024 06:38 AM
மூணாறு : மூணாறு ஊராட்சியில் இடது சாரி கூட்டணியைச் சேர்ந்த தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது.
மூணாறு ஊராட்சியில் உள்ள 21 வார்டுகளில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் இடது சாரி கூட்டணி 10 வார்டுகளை கைப்பற்றிய நிலையில் காங்கிரஸ் 11 வார்டுகளில் வெற்றி பெற்று ஊராட்சியை கைப்பற்றியது.
அதன்பின் 11, 18 வது வார்டுகளைச் சேர்ந்த காங்., உறுப்பினர்கள் 2022 ஜனவரியில் இடது சாரி கூட்டணியில் இணைந்ததால் காங்கிரஸ் நிர்வாகம் கவிழ்ந்து, இடது சாரி கூட்டணி வசம் சென்றது.
அதன்பின் இடது சாரி கூட்டணியை சேர்ந்த 2 உறுப்பினர்கள் 2023ல் காங்கிரசில் இணைந்ததால் அதன் பலம் மீண்டும் 11 ஆக அதிகரித்தது.
இந்நிலையில் காங்கிரஸ்சில் இருந்து விலகி இடது சாரி கூட்டணியில் இணைந்த 18ம் வார்டு உறுப்பினர் தான் வகித்த தலைவர் பொறுப்பை 2023 ஜூனில் ராஜினாமா செய்தார். அதனால் ஜூலை 14ல் நடந்த தலைவர் தேர்வில் காங்., உறுப்பினரின் ஓட்டு செல்லாததால் குலுக்கல் முறையில் நடந்த தேர்வில் இடது சாரி கூட்டணியைச் சேர்ந்த 7ம் வார்டு உறுப்பினர் ஜோதிசதீஷ்குமார் தலைவரானார்.
இதனிடையே காங்கிரஸில் இருந்து விலகிய 2 உறுப்பினர்களை தேர்தல் கமிஷன் தகுதி நீக்கம் செய்ததால் இடது சாரி கூட்டணி எண்ணிக்கை 8 ஆக சரிந்த நிலையில் காங்கிரஸ் பலம் 11 ஆக அதிகரித்தது.
அதனால் ஊராட்சி தலைவருக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பு நேற்று தேர்தல் அதிகாரி தேவிகுளம் வட்டார வளர்ச்சி துறை அதிகாரி டோமிஜோசப் முன்னிலையில் நடந்தது.
அதில் தலைவருக்கு எதிராக 11 பேரும், ஆதரவாக 8 பேரும் ஓட்டளித்தால் ஜோதிசதீஷ்குமார் பொறுப்பை இழந்தார். தற்காலிகமாக தலைவர் பொறுப்பு காங்கிரசைச் சேர்ந்த துணைத்தலைவர் பாலசந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது.
தேர்தல் கமிஷன் உத்தரவுபடி 21 நாட்களுக்குள் தலைவர் தேர்வு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.