Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உருவான மூலிகைத் தோட்டம் கூடலுார் டாக்டர்கள் குழுவிற்கு குவியும் பாராட்டு

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உருவான மூலிகைத் தோட்டம் கூடலுார் டாக்டர்கள் குழுவிற்கு குவியும் பாராட்டு

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உருவான மூலிகைத் தோட்டம் கூடலுார் டாக்டர்கள் குழுவிற்கு குவியும் பாராட்டு

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உருவான மூலிகைத் தோட்டம் கூடலுார் டாக்டர்கள் குழுவிற்கு குவியும் பாராட்டு

ADDED : பிப் 12, 2024 05:44 AM


Google News
Latest Tamil News
காற்று மாசு படுவதன் மூலம் மனிதனுக்கு பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனை தடுப்பதற்காக மரங்கன்றுகள் அதிகளவில் வளர்க்கப்பட்டு சூழல் மாசு படுவதை தவிர்ப்பதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துகிறோம். அதில் மனிதனுக்குத் தேவையான மூலிகைகள் வளர்ப்பது அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.

கூடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல வகையான மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. கடந்தாண்டு மருத்துவமனை வளாகத்தில் கூடலுார் கார்டன் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் 2 ஏக்கர் பரப்பளவில் அடர்வன குறுங்காடுகள் அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான அறிய வகை மரங்கன்றுகள் நடப்பட்டு, தற்போது அவை மரங்களாக அடர்ந்து வளர்ந்துள்ள. இந்நிலையில் சித்தா பிரிவு கட்டடத்திற்கு அருகில் மூலிகைத் தோட்டம் அமைத்து அதில் பல வகையான மூலிகை செடிகள் வளர்த்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

மூலிகைச் செடிகள் மற்ற தாவரங்களைப் போலவே மன அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் நாம் வாழும் சுற்றுப் பகுதிகளில் பாதுகாப்பான 'மைக்ரோ கிளைமேட்டை' உருவாக்குகிறது. மக்களை அதிகமாக பாதிக்கும் துரித உணவுகள் அதிகரித்து விட்டன. இந்தப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு பல்வேறு மூலிகைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

நாட்டையே உலுக்கிய கொரானாவிற்கு சிறந்த மருந்தாக மூலிகைச் செடிகளை அதிகம் பயன்படுத்தப்பட்டன.

பல ஆண்டுகளாக கூடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட நிலவேம்பு கஷாயம், கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மருந்தாகும் மலைவேம்பு


ஜென்னத் பிர்தவுஸ், சித்தா டாக்டர், கூடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: சுகாதார நிலையத்தில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டு மர வகைகளான முருங்கை, மலைவேம்பு, நாவல், நொச்சி, செண்பகம், ஆவாரை, பவளமல்லி ஆகியவை வளர்த்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதே போல் செடி, கொடி வகைகளான ஆடாதொடை, நந்தியாவட்டை, எருக்கு, செவ்வரளி, துளசி, கற்பூரவல்லி, நிலவேம்பு, மிளகு, திப்பிலி, முடக்கத்தான் உள்ளிட்டவைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இங்கு மூலிகைகள் வளர்க்கப்பட்டு வருவதன் மூலம் வரும் நோயாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அதனை வளர்க்கும் எண்ணங்களும் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் மருத்துவமனைக்கு வராமலே சிறிய நோய்கள் குணமாக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தப்படுகிறது. முறை தவறிய மாதவிடாய் சுழற்சியை சீர் செய்ய பயன்படும் மலைவேம்பு, நீரழிவு நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக நாவல், ஆவாரை, சளி இருமலுக்கு ஆடாதொடை உள்ளிட்ட பல மூலிகை செடிகள் இங்கு வளர்க்கப்பட்டு பராமரிப்பதுடன், அதிக பயன்பாட்டில் இருப்பது கூடுதல் சிறப்பாகும்., என்றார்.

நாள்தோறும் நிலவேம்பு கசாயம்


ஞானசெல்வம், சித்தா மருந்தாளுனர் : மாசு ஏற்படுவதை தவிர்க்க மரங்கள் வளர்ப்பது போல் மக்களுக்கு பக்க விளைவுகள் இல்லாத மூலிகை செடிகளை வளர்ப்பது மிகவும் பயனுள்ளதாகும். அந்த வகையில் இங்கு வளர்க்கப்படும் மூலிகைச் செடிகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் நிலவேம்பு கசாயம் காய்ச்சி நோயாளிகளுக்கு வழங்கி வருகிறோம்.

மூலிகை தோட்டம் பொது இடங்களிலும் வீட்டில் உள்ள காலி இடங்களிலும் அமைக்கலாம். இடம் குறைவாக உள்ள வீடுகளில் தொட்டிகளில் வைத்து கூட பராமரிக்கலாம்.

மாசில்லா கூடலுாரை உருவாக்க இம்மாதிரியான சிறந்த முன்னெடுப்புகளை உடனடியாக துவங்குவதே சிறந்த வழியாகும்., என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us