/உள்ளூர் செய்திகள்/தேனி/சிகிச்சைக்கு வந்த கன்றுக்குட்டிக்கு வெறிநோய் பாதிப்புசிகிச்சைக்கு வந்த கன்றுக்குட்டிக்கு வெறிநோய் பாதிப்பு
சிகிச்சைக்கு வந்த கன்றுக்குட்டிக்கு வெறிநோய் பாதிப்பு
சிகிச்சைக்கு வந்த கன்றுக்குட்டிக்கு வெறிநோய் பாதிப்பு
சிகிச்சைக்கு வந்த கன்றுக்குட்டிக்கு வெறிநோய் பாதிப்பு
ADDED : ஜன 04, 2024 06:20 AM
கம்பம்: கம்பத்தில் வெறிநோய் பாதித்த கன்றுக்குட்டி, சிகிச்சைக்கு கொண்டு வந்த போது தான், அதற்கு வெறிநோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது.
சமீபகாலமாக தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து, பொது மக்களுக்கு பிரச்னைகள் ஏற்படுகிறது. அதிலும் வெறிநோய் பாதித்த தெரு நாய்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்நிலையில் வெறிநோய் பாதித்த கன்றுகுட்டி ஒன்று நேற்று கம்பம் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அதன் உரிமையாளர் கொண்டு வந்துள்ளார். கன்றுக்குட்டி வாயில் இருந்து உமிழ்நீர் உமிழ்ந்தபடி இருந்துள்ளது. தொடர்ந்து கத்தியும், உணவு எடுக்காமலும் இருந்துள்ளதை உரிமையாளர் கூறியுள்ளார்.
அதைப் பார்த்தவுடன் வெறிநோய் பாதித்துள்ளது என்பதை கணித்த டாக்டர், நீங்கள் கன்று குட்டியை எடுத்துச் செல்லுங்கள். இதற்கு சிகிச்சையில்லை. நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறி அனுப்பியுள்ளார்.
வெறிநோய் பாதித்த நாய் கடித்ததால், கன்றுக்குட்டிக்கு ரேபிஸ் தாக்கியிருக்கலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன.