/உள்ளூர் செய்திகள்/தேனி/துவரை அறுவடை துவக்கம் விளைச்சல் குறைவால் வேதனைதுவரை அறுவடை துவக்கம் விளைச்சல் குறைவால் வேதனை
துவரை அறுவடை துவக்கம் விளைச்சல் குறைவால் வேதனை
துவரை அறுவடை துவக்கம் விளைச்சல் குறைவால் வேதனை
துவரை அறுவடை துவக்கம் விளைச்சல் குறைவால் வேதனை
ADDED : பிப் 11, 2024 01:38 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் துவரை அறுவடை துவங்கியுள்ளது. எதிர்பார்த்த விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை வேலப்பர் கோயில் மலை அடிவார பகுதி, தெப்பம்பட்டி, கணேசபுரம், பாலக்கோம்பை, ராயவேலூர், ஏத்தக்கோயில், மறவபட்டி உட்பட பல கிராமங்களில் துவரை சாகுபடி உள்ளது. கடந்த ஆண்டு ஜூன், ஜூலையில் விதைப்புக்குப் பின் துவரை செடிகள் வளர்ந்து தற்போது முதிர்ந்த காய்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. துவரை செடிகளில் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை. இதனால் விவசாயிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: துவரை செடிகள் வளர்ந்து பலன் தருவதற்கு 8 முதல் 10 மாதங்கள் ஆகும். துவரை செடிகள் வளர்ந்து பூ பூக்கும் நிலையில் பெய்த சீரற்ற மழையால் விளைச்சல் பாதித்துள்ளது. தற்போது செடிகளில் காய்களின் வளர்ச்சியும் சீரற்ற நிலையில் உள்ளது. ஒரே இடத்தில் உள்ள செடிகளில் முதிர்ந்த காய்களை மட்டும் அறுவடை செய்ய முடியவில்லை. முதிர்ச்சி அடையாத காய்களை அறுவடை செய்தால் நஷ்டம் ஆகிறது. முதிர்ந்த காய்களை உடனுக்குடன் அறுவடை செய்ய விட்டால் பாதிப்பு ஏற்படும். மொத்தத்தில் விளைச்சல் பாதிப்பு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுத்துகிறது. துவரை பயறும் விலை உயரவில்லை. கடந்த ஆண்டு குவின்டால் ரூ.6500 ஆக இருந்த விலையே தற்போதும் தொடர்கிறது. இடைத்தரகர்கள், வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட செய்கின்றனர் என கூறினர்.