/உள்ளூர் செய்திகள்/தேனி/கஞ்சா கடத்திய வாலிபர்கள், மூதாட்டி கைதுகஞ்சா கடத்திய வாலிபர்கள், மூதாட்டி கைது
கஞ்சா கடத்திய வாலிபர்கள், மூதாட்டி கைது
கஞ்சா கடத்திய வாலிபர்கள், மூதாட்டி கைது
கஞ்சா கடத்திய வாலிபர்கள், மூதாட்டி கைது
ADDED : பிப் 12, 2024 05:50 AM
தேனி: தேனி போடி ரோட்டில் தீர்த்தத் தொட்டி அருகே மதுவிலக்கு எஸ்.ஐ., சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் டூவீலரில் வந்த தேவாரம் அப்பாவு பிள்ளை தெரு பாண்டிச்செல்வம் 37, போடி மீனாட்சிபுரம் விஜயகுமார் 36 ஆகியோரை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தனர். அவர்கள் கஞ்சாவை சட்ட விரோத விற்பனைக்கு கொண்டு சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் கண்டமனுார் வருஷநாடு செல்லும் ரோட்டில் உள்ள குளக்கரையில் விற்பனைக்காக 300 கிராம் கஞ்சா வைத்திருந்த கண்டமனுார் தெற்குத்தெரு ரத்தினம்மாளை 74, மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.