ADDED : ஜன 05, 2024 05:09 AM
மூணாறு, : மூணாறில் கேரள பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு நாளை (ஜன.6) துவங்குகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் சுராஜ் தொடங்கி வைக்கிறார். மாவட்ட செயலாளர் வர்க்கீஸ்,எம்.எல்.ஏ.ராஜா பங்கேற்கின்றனர். இதனை வரவேற்பு குழு துணைத் தலைவர் விஜயன், கன்வீனர் ஹெப்சிகிறிஸ்டினால், சங்கத்தின் மாவட்ட பொருளாளர் தங்கராஜ், நிர்வாக குழு உறுப்பினர் ஷாஜிதாமஸ் ஆகியோர் நேற்று கூட்டாக தெரிவித்தனர்.