/உள்ளூர் செய்திகள்/தேனி/ விலை கிடைக்காததால் மரங்களில் வீணாகும் புளியம் பழங்கள் விலை கிடைக்காததால் மரங்களில் வீணாகும் புளியம் பழங்கள்
விலை கிடைக்காததால் மரங்களில் வீணாகும் புளியம் பழங்கள்
விலை கிடைக்காததால் மரங்களில் வீணாகும் புளியம் பழங்கள்
விலை கிடைக்காததால் மரங்களில் வீணாகும் புளியம் பழங்கள்
ADDED : மார் 26, 2025 04:10 AM
ஆண்டிபட்டி, : உரிய விலை கிடைக்காததால் ஆண்டிபட்டி பகுதியில் மரங்களில் பழுத்த புளியம்பழங்கள் பறிக்காமல் வீணாகிறது. ஆண்டிபட்டி பகுதியில் பிச்சம்பட்டி, கோத்தலூத்து, கன்னியப்பபிள்ளைபட்டி, கதிர்நரசிங்கபுரம், ஏத்தகோவில், மறவபட்டி, சித்தையகவுண்டன்பட்டி உட்பட பல கிராமங்களில் நெடுஞ்சாலை ஓரங்களிலும், தனியார் தோப்புகளிலும் அதிகப்படியான புளிய மரங்கள் உள்ளன. தற்போது புளி பறிப்புக்கான சீசன் துவங்கியுள்ளது. இந்தாண்டு புளிய மரங்களில் விளைச்சல் அதிகரித்துள்ளது. விளைச்சல் அதிகரித்தாலும் கட்டுபடியாடும் விலை இல்லை. இதனால் நெடுஞ்சாலை மரங்களில் ஏலம் எடுத்தவர்கள், விவசாயிகள் புளிய மரங்களில் பழங்கள் பறிப்பதை தவிர்த்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: தற்போது கொட்டை நீக்காத புளி கிலோ 30க்கும் குறைவாக விலை நிர்ணயம் செய்கின்றனர். பறிப்பு கூலி பழங்களை ஓடுகளில் இருந்து பிரித்தெடுத்தல், கொட்டை நீக்குதல் போன்ற பணிகளுக்கு கூடுதலான ஆட்கள் தேவைப்படுகின்றனர். இவர்களுக்கான கூலி அதிகமாகிறது. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான வாடகையும் அதிகமாவதால் பறிப்புக்கு பின் அடக்க விலை அதிகமாகிறது. அதற்கேற்ற விலை கிடைக்காததால் மரங்களில் பறிப்பதை தவிர்க்கின்றனர். பல இடங்களில் புளியம்பழங்கள் பறிக்கப்படாமல் மரங்களில் வீணாகிறது என்றனர்.