பெரியகுளம் : பெரியகுளம் அருகே வடுகபட்டியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் 21.
இவரது வீட்டில் இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. இதனால் சில தினங்களாக மன உளைச்சலில் இருந்த ஜெயபிரகாஷ், தங்களது தோட்டத்திற்கு சென்று தனக்கு தானே உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.