Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ சுருளி அருவி, மேகமலை பகுதிகளை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை தேவை

சுருளி அருவி, மேகமலை பகுதிகளை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை தேவை

சுருளி அருவி, மேகமலை பகுதிகளை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை தேவை

சுருளி அருவி, மேகமலை பகுதிகளை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை தேவை

ADDED : ஜூன் 16, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
கம்பம்: ''சுருளி அருவி மற்றும் மேகமலை பகுதிகளை சுற்றுலா தலங்களாக அறிவித்தும் செயல்படுத்தாத நிலை தொடர்வதால் இப்பகுதிகளை சுற்றுலா பகுதிகளாக அறிவிக்க துணை முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலா மூலம் அரசிற்கு ஆண்டுதோறும் கோடிக் கணத்தில் வருவாய் கிடைக்கிறது. எனவே அனைத்து மாநில அரசுகளும் சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஆனால் தேனி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட சுற்றுலா தலங்களில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யாமலும், அதற்கான முயற்சிகள் எடுக்காமலும் உள்ளனர். சுற்றுலா மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கை முடிவாகும். அதன்படி தேனி மாவட்டத்தில் சுருளி அருவி, மேகமலை பகுதிகள் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளாகும். தினமும் நுாற்றுக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே மாநில அரசு பல ஆண்டுகளுக்கு முன் சுருளி அருவியையும், மேகமலை பகுதிகளையும் சுற்றுலா தலமாக அறிவித்தது. ஆனால் 2 இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் தங்கிச் செல்வதற்கான எந்த அடிப்படை வசதிகளும் செய்யவில்லை. தங்கும் வசதி, சாப்பிட ஓட்டல்கள், போக்குவரத்து வசதி என எதுவுமே இல்லை.

ஹைவேவிஸ் அணையில் படகு சவாரி நடத்தலாம். சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் தங்க தங்கும் விடுதிகள் கட்டலாம். ஆனால் இந்த 2 இடங்களிலும் எந்தவித வசதிகளும் இல்லை. எனவே சுற்றுலாவை மேம்படுத்த சுருளி அருவி, மேகமலை பகுதியில் தேவையான வசதிகளை செய்து, சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு துணை முதல்வர் உத்தரவிட வேண்டும். சுருளி அருவி சுற்றுலா தலமாக மட்டும் இன்றி, ஆன்மிக ஸ்தலமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us