/உள்ளூர் செய்திகள்/தேனி/கம்பத்தில் பெண்ணை கொன்ற சிறப்பு எஸ்.ஐ.,க்கு ஆயுள் தண்டனைகம்பத்தில் பெண்ணை கொன்ற சிறப்பு எஸ்.ஐ.,க்கு ஆயுள் தண்டனை
கம்பத்தில் பெண்ணை கொன்ற சிறப்பு எஸ்.ஐ.,க்கு ஆயுள் தண்டனை
கம்பத்தில் பெண்ணை கொன்ற சிறப்பு எஸ்.ஐ.,க்கு ஆயுள் தண்டனை
கம்பத்தில் பெண்ணை கொன்ற சிறப்பு எஸ்.ஐ.,க்கு ஆயுள் தண்டனை
ADDED : ஜன 10, 2024 11:50 PM

தேனி:கம்பத்தில் தன்னுடன் பழகிய பெண்ணை கொலை செய்த போக்குவரத்து சிறப்பு எஸ்.ஐ., ஜெயக்குமாருக்கு 55, தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கம்பம் போக்குவரத்து சிறப்பு எஸ்.ஐ., ஜெயக்குமார். இவர் 2023 பிப்., 4 முதல் மார்ச் 3 வரை மருத்துவ விடுப்பில் சென்றார். சுருளிபட்டி பிரகாஷ் மனைவி அமுதா 43, கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2009 முதல் பிரிந்து வாழ்ந்தார். சிறப்பு எஸ்.ஐ.,க்கும், அமுதாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. 2009 முதல் இருவரும் கணவன் ,- மனைவியாக வாழ்ந்தனர். பின் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
2023 மார்ச் 2ல் அமுதா படுக்கையில் இறந்து கிடந்தார். அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக மகள் ருத்ரா கம்பம் வடக்கு போலீசில் புகார் அளித்தார்.
உத்தமபாளையம் ஏ.எஸ்.பி., மதுகுமாரி விசாரணையில், போக்குவரத்து சிறப்பு எஸ்.ஐ., ஜெயக்குமார் 2023 மார்ச் 1 ல் கம்ப மெட்டு காலனியில் உள்ள வீட்டிற்கு சென்று சில நிமிடங்களில் பதட்டத்துடன் வெளியே வந்து கதவை சாத்திவிட்டு, டூவீலரை எடுத்துச் சென்றது தெரியவந்தது. அமுதாவின் பிரேத பரிசோதனையில் தகராறில் அவர் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இக்கொலை தொடர்பாக சிறப்பு எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்தது.
நேற்று தீர்ப்பளித்த நீதிபதி கோபிநாதன், குற்றவாளியான சிறப்பு எஸ்.ஐ., ஜெயக்குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் குருவராஜ் ஆஜரானார்.