Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மின்சாரம் தாக்கி மகன் காயம் அதிர்ச்சியில் தந்தை மரணம்

மின்சாரம் தாக்கி மகன் காயம் அதிர்ச்சியில் தந்தை மரணம்

மின்சாரம் தாக்கி மகன் காயம் அதிர்ச்சியில் தந்தை மரணம்

மின்சாரம் தாக்கி மகன் காயம் அதிர்ச்சியில் தந்தை மரணம்

ADDED : ஜூன் 11, 2025 07:37 AM


Google News
கம்பம் : கம்பத்தில் உயர் மின் அழுத்த மின்சாரம் தாக்கி மகன் முகமது இர்பான் 24, காயமடைந்து சிகிச்சையில் உள்ளார். இத் தகவல் அறிந்த தந்தை முபாரக் அலி 68, அதிர்ச்சியில் மரணம் அடைந்தார்.

கம்பமெட்டு ரோட்டில் கிருஷ்ணாபுரத்தில் வசிப்பவர் முபாரக் அலி, ரெமிலா பானு தம்பதியினர். இவரது மகன் முகமது இர்பான். இவர் ஜுன் 6 ல் சுப்ரமணியசுவாமி கோயில் தெருவில் உள்ள உறவினர் ஷாகுல் ஹமீது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு வீட்டின் மொட்டைமாடியில் கம்பு ஒன்றை எடுக்க சென்ற போது, மாடிக்கு மேல் செல்லும் உயர் மின் அழுத்த ஒயர் கம்பில் உரசி முகமது இர்பான் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

அவர் கம்பம் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து, தற்போது தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

தனது ஒரே மகனின் நிலையை பார்த்து அதிர்ச்சியில் இருந்த தந்தை முபாரக் அலி நேற்று வீட்டில் இருந்த போது, திடீரென இறந்தார்.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us