/உள்ளூர் செய்திகள்/தேனி/ நெடுஞ்சாலையில் சேதமடைந்த குடிநீர் கேட் வால்வு சிலாப் நெடுஞ்சாலையில் சேதமடைந்த குடிநீர் கேட் வால்வு சிலாப்
நெடுஞ்சாலையில் சேதமடைந்த குடிநீர் கேட் வால்வு சிலாப்
நெடுஞ்சாலையில் சேதமடைந்த குடிநீர் கேட் வால்வு சிலாப்
நெடுஞ்சாலையில் சேதமடைந்த குடிநீர் கேட் வால்வு சிலாப்
ADDED : ஜூன் 11, 2025 07:36 AM

கூடலுா : கூடலுார் பழைய தபால் நிலையம் அருகே நெடுஞ்சாலையில் குடிநீர் கேட் வால்வு உள்ளது.
குடியிருப்புகளுக்கு குடிநீர் சப்ளை செய்யும் பகிர்மான குழாய் நெடுஞ்சாலையில் அமைப்பதற்கு பொதுமக்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இருந்த போதிலும் பல இடங்களில் நெடுஞ்சாலையிலேயே பகிர்மான குழாயும் தண்ணீர் திறந்து விடப்படும் கேட்வால்வும் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் பகுதியில் அமைக்கப்பட்ட சிமென்ட் சிலாப் தரமாக அமைக்கப்படாததால் சேதம் அடைந்துள்ளது.
சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் முழுவதும் கேட் வால்வு தொட்டியில் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நெடுஞ்சாலையில் வரும் டூவீலர்களில் வருபவர்கள் இரவு நேரங்களில் சேதமடைந்தது தெரியாமல் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.