/உள்ளூர் செய்திகள்/தேனி/நாய் குறுக்கே வந்ததால் கீழே விழுந்த எஸ்.ஐ., காயம்நாய் குறுக்கே வந்ததால் கீழே விழுந்த எஸ்.ஐ., காயம்
நாய் குறுக்கே வந்ததால் கீழே விழுந்த எஸ்.ஐ., காயம்
நாய் குறுக்கே வந்ததால் கீழே விழுந்த எஸ்.ஐ., காயம்
நாய் குறுக்கே வந்ததால் கீழே விழுந்த எஸ்.ஐ., காயம்
ADDED : பிப் 06, 2024 12:35 AM
போடி : போடி அருகே புலிகுத்தியை சேர்ந்தவர் ரமேஷ் 55. இவர் தேவாரம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., ஆக பணியாற்றி வருகிறார். வீரபாண்டி போலீஸ் குடியிருப்பில் குடியிருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீரபாண்டியில் இருந்து தேவாரத்திற்கு டூவீலரில் சென்றுள்ளார்.
தேவாரம் மெயின் ரோடு, கோணாம்பட்டி பிரிவு வளைவில் திரும்பும் போது திடீரென நாய் குறுக்கே வந்துள்ளது.
நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ரமேஷ் பலத்த காயம் அடைந்தார். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின் தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். போடி தாலூகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.