/உள்ளூர் செய்திகள்/தேனி/ பாதாள சாக்கடை பணி முடியாததால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு பாதாள சாக்கடை பணி முடியாததால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு
பாதாள சாக்கடை பணி முடியாததால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு
பாதாள சாக்கடை பணி முடியாததால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு
பாதாள சாக்கடை பணி முடியாததால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு
ADDED : ஜூன் 01, 2025 12:28 AM

பெரியகுளம்:பெரியகுளம் மார்க்கெட் அழகப்பன் சந்தில் பாதாளச்சாக்கடை புதிய குழாய் அமைக்கும் பணி முழுமை பெறாததால் தெருவில் கழிவுநீர் தேங்கி பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல் சிரமப்படுகின்றனர்.
பெரியகுளம் நகராட்சி 19 வது வார்டு தென்கரை காய்கறி மார்க்கெட் இணைப்பு பகுதியாக அழகப்பன் சந்தில் துவங்கி 150 மீட்டர் தூரம் காளஹஸ்தீஸ்வரர் கோயில் முன்புறம் முடிகிறது. இந்த பகுதியில் 5 க்கும் அதிகமான குறுக்கு வீதிகள் உள்ளது. நூற்றுக்கும் அதிகமான குடியிப்புகள் உள்ளன. அழகப்பன் சந்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாதாளச்சாக்கடைக்கு 'மண் பைப்' அமைக்கப்பட்டது. தற்போது மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில் அழுத்தம் காரணமாக மண்பைப் உடைந்து கழிவுநீர் வெளியேறியது.
மண் பைப்பை அகற்றி புதிய இரும்பு பைப் அமைக்க கோரினர். நகராட்சி நிர்வாகம் பொது நிதியியல் இருந்து ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் மண்பைப்பை அகற்றிவிட்டு, ' 9 இன்ச் அகல இரும்பு பைப் அமைக்க ஒரு மாதத்திற்கு முன்பு வேலை துவங்கியது. புதிய பைப் பதிக்கப்பட்டது. இதற்காக சந்தில் இருந்த பேவர் பிளாக் கற்கள் அகற்றப்பட்டது. தற்போது பணிகள் முடிந்து பல நாட்கள் ஆகியும் முறையாக மூடப்படாமல் உள்ளது. தெரு நெடுகிலும் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
குருமூர்த்தி,சமூக ஆர்வலர்: இந்த சந்தில் குண்டும், குழியுமான பள்ளத்தால் வயதில் மூத்தவர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சுகாதாரகேடால் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நிர்வாகம் பணியினை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.-