ADDED : பிப் 11, 2024 01:40 AM
உத்தமபாளையம்: உத்தமபாளையம் எஸ்.ஏ.பி. மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின் 34 வது ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவில் கருந்தராவுத்தர் கல்லூரி முதல்வர் முகமது மீரான் வாழ்த்தி பேசினார். பள்ளி முதல்வர் ஈஸ்வரன் வரவேற்றார். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பள்ளி தாளாளர் கண்ணன், செயலர் முருகன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளை பள்ளியின் நிர்வாக அலுவலர் ஜியாவுல் ஹக் ஒருங்கிணைத்தார். ஆங்கில ஆசிரியர் அனிஷ் ராஜா நன்றி கூறினார்.