Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ தொடர் சாரல் மழையால் ஆண்டிபட்டி ஆட்டுச் சந்தையில் விற்பனை மந்தம்

தொடர் சாரல் மழையால் ஆண்டிபட்டி ஆட்டுச் சந்தையில் விற்பனை மந்தம்

தொடர் சாரல் மழையால் ஆண்டிபட்டி ஆட்டுச் சந்தையில் விற்பனை மந்தம்

தொடர் சாரல் மழையால் ஆண்டிபட்டி ஆட்டுச் சந்தையில் விற்பனை மந்தம்

ADDED : மே 27, 2025 01:28 AM


Google News
Latest Tamil News
ஆண்டிபட்டி: தொடர்ந்து மூன்று நாட்களாக பலத்த காற்றுடன் அவ்வப்போது பெய்யும் சாரல் மழையால் ஆண்டிபட்டி ஆட்டுச் சந்தை நேற்று களை இழந்து காணப்பட்டது.

ஆண்டிபட்டி வாரச்சந்தை ஒவ்வொரு திங்கட்கிழமையும் கூடும். இது மாவட்டத்தில் பெரிய ஆட்டு சந்தையாகும். காலை 6:00 மணிக்கு துவங்கும் ஆட்டுச் சந்தை 10:00 மணிக்குள் முடிந்து விடும்.

ஆண்டிபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் சந்தைக்கு கொண்டு வரப்படும். வெளியூர்களில் இருந்தும் வியாபாரிகள் மூலம் வாகனங்களில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

கடந்த சில வாரங்களாக பங்குனி, சித்திரை, வைகாசி பொங்கல் விழாக்கள் பல்வேறு கிராமங்களில் நடந்தது. தொடர்ந்து வீரபாண்டி திருவிழாவும் சேர்ந்தது. இதனால் ஆடுகளுக்கான தேவை அதிகம் இருந்தது.

கடந்த சில வாரங்களாக விறுவிறுப்புடன் இருந்த ஆட்டுச் சந்தை, பல்வேறு இடங்களில் பெய்யும் சாரல் மழையால் நேற்று விறுவிறுப்பு இல்லை.

வியாபாரிகள் கூறியதாவது: ஆண்டிபட்டி வார சந்தைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வரும்.

தீபாவளி, ஆடி, தைப்பொங்கல் மற்றும் கிராம பொங்கல் வாரங்களில் ஆடுகள் அதிக எண்ணிக்கையில் வரும்.

வியாபாரிகளும் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி செல்வர். விற்பனைக்கு கொண்டுவரப்படும் ஆடுகள் கிராக்கியுடன் விற்று விடும். ஆண்டிபட்டி பகுதியில் இரு நாட்களாக அடுத்தடுத்து பெய்து வரும் சாரல் மழையால் 500 க்கும் குறைவான ஆடுகளே விற்பனைக்கு வந்திருந்தன.

வெளியூர் வியாபாரிகளும் அதிகம் வரவில்லை. சில மாதங்களில் பயன்பாடு அதிகமானதால் ஆடுகள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. ஆட்டுச் சந்தை மீண்டும் ஆடி மாதம் வேகம் எடுக்கும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us