/உள்ளூர் செய்திகள்/தேனி/ திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகை திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகை
திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகை
திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகை
திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகை
ADDED : செப் 09, 2025 04:41 AM
கம்பம்: கால்நடை பராமரிப்பு துறை மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. 20 நாட்கள் பயிற்சிக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
கிராமப்புற இளைஞர்களுக்கு பசு, ஆடு, கோழி வளர்ப்பு, பண்ணை மேலாண்மை பிரிவுகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. இப் பயிற்சி 20 நாட்கள் நடைபெறும்.
இதில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி நாட்களில் இலவச மதிய உணவு வழங்கப்படும்.
பயிற்சி நிறைவின் போது அவர்களின் வங்கி கணக்கில் ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகை வரவு வைக்கப்படும். மாவட்டத்திற்கு 150 இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஆறு மாதங்களுக்கு 20 நாட்களுக்கு ஒரு பயிற்சி வீதம், 30 பேர்கள் வீதம் பயிற்சி தரப்படுகிறது.
கால்நடை பராமரிப்பு துறையினர் கூறுகையில், 'கிராமப்புற இளைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், ஒவ்வொரு இளைஞரையும் ஒரு தொழில் முனைவோராக உருவாக்கவும் இந்த பயிற்சி உதவும். நேற்று முதல் இந்த பயிற்சி துவங்கி உள்ளது. அல்லிநகரம் கால்நடை மருத்துவமனையில் நடைபெறுகிறது.
பயிற்சியில் சேர விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அல்லது அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்,'என்றனர்.