/உள்ளூர் செய்திகள்/தேனி/ மேகமலை ரோட்டில் ரூ.3 கோடி செலவில் 'ரோலர் கிராஸ் பேரியர்' அமைக்க திட்டம் மேகமலை ரோட்டில் ரூ.3 கோடி செலவில் 'ரோலர் கிராஸ் பேரியர்' அமைக்க திட்டம்
மேகமலை ரோட்டில் ரூ.3 கோடி செலவில் 'ரோலர் கிராஸ் பேரியர்' அமைக்க திட்டம்
மேகமலை ரோட்டில் ரூ.3 கோடி செலவில் 'ரோலர் கிராஸ் பேரியர்' அமைக்க திட்டம்
மேகமலை ரோட்டில் ரூ.3 கோடி செலவில் 'ரோலர் கிராஸ் பேரியர்' அமைக்க திட்டம்
ADDED : செப் 09, 2025 04:40 AM
கம்பம்: மேகமலை ரோட்டில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 'ரோலர் கிராஸ் பேரியர்' அமைக்க மதிப்பீடுகள் தயாரித்து அரசின் அனுமதிக்கு காத்திருப்பதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
மேகமலை மிக முக்கிய சுற்றுலா தலமாகும். இங்குள்ள ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு என ஏழு மலை கிராமங்கள் உள்ளன.
சின்னமனுாரில் இருந்து இரவங்கலாறு வரை 45 கி.மீ., துாரம் கொண்ட இந்த மலைப் பகுதியில் நகர் பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டு கோடை வாசஸ்தலமாக உள்ளது. இதில் சின்னமனுாரில் இருந்து ஹைவேவிஸ் வரை மலைப்பகுதி ரோடு உள்ளது.
ஆபத்தான வளைவுகளை கொண்ட இந்த ரோட்டில் தடுப்பு கம்பிகள், சுவர்கள் கட்டப்பட்டு உள்ளன.
வன உயிரினங்களின் நடமாட்டத்திற்கு வழிவிடும் வகையில் குறிப்பிட்ட சில இடங்களில் தடுப்பு சுவரோ அல்லது தடுப்பு கம்பி அமைக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் தடுப்பு கம்பி, தடுப்பு சுவர்களை அகற்றிவிட்டு நவீன 'ரோலர் கிராஸ் பேரியர்கள்' அமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.
ரூ.3 கோடியில் 500 முதல் 600 மீட்டர் துாரத்திற்கு ஆங்காங்கே அமைக்க மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்தில் கம்ப மெட்டு மலை ரோட்டில் இது போன்ற ரோலர் கிராஸ் பேரியர் நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.