Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/பணம் இரட்டிப்பாக தருவதாக ரூ.11 கோடி மோசடி புகார்

பணம் இரட்டிப்பாக தருவதாக ரூ.11 கோடி மோசடி புகார்

பணம் இரட்டிப்பாக தருவதாக ரூ.11 கோடி மோசடி புகார்

பணம் இரட்டிப்பாக தருவதாக ரூ.11 கோடி மோசடி புகார்

ADDED : பிப் 06, 2024 03:15 AM


Google News
தேனி: தேனியில் பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி சிறு சேமிப்பு சீட்டு நடத்தி ரூ.11.56 கோடி மோசடி செய்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க மாநில கூடுதல் டி.ஜி.பி., அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

பூதிப்புரம் வாழையாத்துப்பட்டி சரண்யா 36. இவரிடம் 2000ல் அதே பகுதியைச் சேர்ந்த ராஜாமணி, மலர்விழி நட்பாக பழகினர். சிறு சேமிப்பு சீட்டு நடத்தி வருவதாகவும் மாதந்தோறும் ரூ.200 செலுத்தினால் 36 மாதங்களில் ரூ.7200ம் பின் 37 வது மாதத்தில் இரட்டிப்புத்தொகை வழங்குகிறோம் எனவும் 2 பேரும் தெரிவித்தனர். அதை நம்பிய சரண்யா பணத்தை செலுத்தினார்.

இதுபோல பொம்மையக்கவுண்டன்பட்டி, பூதிப்புரத்தை சேர்ந்த 561 பேரை ராஜாமணி, மலர்விழி, தமிழரசி, ஜெயப்பிரியா ஆகியோர் தாங்கள் நடத்திய 4 சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்த்து ரூ.5 கோடி 71 லட்சத்து 20 ஆயிரம் வசூலித்தனர். ஆனால் கூறியபடி 561 பேருக்கு பணத்தை இரட்டிப்பாக வழங்கவில்லை. அதன் மதிப்பு ரூ.11 கோடியே 56 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.

இதனால் 561 பேரும் ஏமாற்றப்பட்டனர். அவர்களின் புகாரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ., லதா ஆகியோர் பிப்., 1ல் ராஜாமணி, மலர்விழி, தமிழரசி, ஜெயப்பிரியா ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில் மாவட்ட எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவின்படி இவ்வழக்கை மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி., அலுவலகத்திற்கு பரிந்துரை அறிக்கை அனுப்பப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us