/உள்ளூர் செய்திகள்/தேனி/சிமென்ட் 'டீலர்ஷிப்' பெற்று தருவதாக ரூ.10 லட்சம் மோசடி: பட்டதாரி கைதுசிமென்ட் 'டீலர்ஷிப்' பெற்று தருவதாக ரூ.10 லட்சம் மோசடி: பட்டதாரி கைது
சிமென்ட் 'டீலர்ஷிப்' பெற்று தருவதாக ரூ.10 லட்சம் மோசடி: பட்டதாரி கைது
சிமென்ட் 'டீலர்ஷிப்' பெற்று தருவதாக ரூ.10 லட்சம் மோசடி: பட்டதாரி கைது
சிமென்ட் 'டீலர்ஷிப்' பெற்று தருவதாக ரூ.10 லட்சம் மோசடி: பட்டதாரி கைது
ADDED : ஜன 07, 2024 01:51 AM

தேனி:தேனி மாவட்டம், வெம்பக்கோட்டை சங்கராபுரத்தை சேர்ந்தவர் அய்யப்பன், 59; தனியார் ஏஜன்சி உரிமையாளர். இவர் திருச்சியில் பணி செய்த போது திருச்சி ராயல்சிட்டி வேல்மணி அறிமுகமானார். இருவரும் 20 ஆண்டுகளாக பழகினர்.
வேல்மணி வாயிலாக திருச்சியை சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரி அசோக் சரவணன், 42, அய்யப்பனுக்கு அறிமுகானார்.
இந்நிலையில், மும்பையில் சிமென்ட் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து மதுரை டீலர்ஷிப் பெற்று தருவதாகவும், அதற்கு, 10 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என, இருவரும் அய்யப்பனிடம் கூறினர்.
நம்பிய அய்யப்பன், மூன்று தவணைகளாக, 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தார். டீலர்ஷிப் கிடைக்காததால், கொடுத்த பணத்தை அய்யப்பன் திருப்பி கேட்டதற்கு, வங்கி காசோலையை அவர்கள் வழங்கினர். காசோலை பணமின்றி திரும்பியது.
இதையடுத்து, அய்யப்பன் தேனி குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் மனு செய்தார்.
நீதிமன்றம் உத்தரவின்படி, குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, வேல்மணி, அசோக் சரவணன் மீது வழக்கு பதிந்து விசாரித்தனர். தலைமறைவான அசோக் சரவணனை கோவையில் போலீசார் கைது செய்தனர்.