/உள்ளூர் செய்திகள்/தேனி/ரோடு பணியில் தாமதம் வாகன ஓட்டிகள் சிரமம்ரோடு பணியில் தாமதம் வாகன ஓட்டிகள் சிரமம்
ரோடு பணியில் தாமதம் வாகன ஓட்டிகள் சிரமம்
ரோடு பணியில் தாமதம் வாகன ஓட்டிகள் சிரமம்
ரோடு பணியில் தாமதம் வாகன ஓட்டிகள் சிரமம்
ADDED : ஜன 15, 2024 12:19 AM

கூடலுார் : கூடலுார் தண்ணீர் தொட்டி தெருவில் ஜல்லிக்கற்கள் பரப்பி 2 மாதங்களுக்கு மேலாகியும் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்காததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
கூடலுார் நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் தொட்டி தெரு வழியாக செல்ல வேண்டும். இத்தெருவில் நர்சரி பள்ளி, ரைஸ் மில், ரேஷன் கடைகள், மின்வாரிய அலுவலகம் என முக்கிய இடங்கள் அதிகம் உள்ளன. மேலும் புறவழிச்சாலை இணைப்பு ரோடாகவும் உள்ளது.
பல மாதங்களாக குண்டும் குழியுமாக இருந்த ரோட்டை சீரமைக்க 2 மாதங்களுக்கு முன் ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டன. ஆனால் தொடர்ந்து தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்காததால் டூவீலரில் செல்பவர்களும் நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
முக்கியத்துவம் வாய்ந்த தெருவில் விரைவாக தார்சாலை அமைக்க நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


