நீதிமன்ற உத்தரவில் ரோடு சீரமைப்பு
நீதிமன்ற உத்தரவில் ரோடு சீரமைப்பு
நீதிமன்ற உத்தரவில் ரோடு சீரமைப்பு
ADDED : ஜூன் 07, 2025 12:58 AM
தேனி: பெரியகுளம் ஜெயராஜ் அன்னப்பாக்கியம் மகளிர் கலைக் கல்லுாரி ரோடு சேதமடைந்தது. இதனால் மாணவிகள் சிரமப்பட்டனர். இதுகுறித்து கல்லுாரி முதல்வர் தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ரஜினியிடம் புகார் அளித்தார்.
அவர் சம்பந்தத்தப்பட்ட துறையினர் ரோட்டை சீரமைக்கவும், சீரமைத்தப்பின் புகைப்படங்களை சமர்பிக்க உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து தாமரைக்குளம் பேரூராட்சி சார்பில் ரோடு சீரமைக்கப்பட்டது. நேற்று ரோடு சீரமைக்கப்பட்ட புகைப்படம் நீதிபதியிடம் துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.